கேரளத்தில் இளம் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நந்தகுமார் என்பவர் சட்டப்படி மணமுடிக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு கேரள உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தது.
20 வயதான அந்த இளம் பெண் யாருடன் வாழ வேண்டும் என்பதை அவரே முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழும் முறை தற்போது சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்று வருவதாக தெரிவித்த உச்சநீதிமன்றம் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளது.