குண்டூர் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொது விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.
ஆந்திராவின் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை தொடர்ந்து, விஜயவாடாவில் பொது விழிப்புணர்வு பேரணி ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.
சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் எனது கவனத்துக்கு வந்ததும், சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி குற்றம் செய்தவரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
இதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் கருணை காட்ட கூடாது. பெண்கள், குற்றவாளிகள் முகத்தில் காறி துப்ப வேண்டும். அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள், அவர்களை மன்னிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்து, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒரு குழு அமைத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றார்.
நலà¯à®²à®¤à¯. இதனையà¯à®®à¯ பாரà¯à®™à¯à®•à®³à¯. https://tamil-enoolaham.blogspot.com/2018/06/rape-in-india.html