கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக மற்றூம் மதச்சார்பற்ற ஜனதா தளாம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. கடைசி வாரம் முழுக்க பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளின் அடிப்படையில், வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரசாரம் முடிவுக்கு வர வேண்டும் என்பதால், நேற்று மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை காலை 7 மணி முத
ல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மற்றும் 15-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்த உள்ளூர் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற மத்திய படையினர் சுமார் ஐம்பதாயிரம் பேர் கர்நாடகாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் பணிகள் குறித்து பேசிய கர்நாடக போலீஸ் உயர் அதிகாரி, மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 585 கம்பெனி போலீசார் இன்று கர்நாடகம் வந்துள்ளனர். இதுமட்டுமின்றி பாதுகாப்பு பணிகளில் 22 ஆயிரம் ஹோம்கார்டுகளும், பக்கத்து நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 7500 ஹோம்கார்டுகளும் பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 82,157 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் 97405 போலீசாருக்கு லைசென்சுடன் கூடிய துப்பாகிகள் வழங்கப்பட்டுள்ளது.
117 தேர்தல் தொடர்பான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இருந்த போதும், ஜாதி ரீதியான சம்ப்வங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.



