கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில், மதியம் 2 மணி நிலவரப்படி 36.5% வாக்குகள் பதிவாயின.
அதிகபட்சமாக, தட்சின கன்னடப் பகுதியில், 47% வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகவும் குறைந்த பட்சமாக பெங்களூர் நகரப் பகுதியில் 28% வாக்குகளே பதிவாகியுள்ளன.
வாக்குகள் அதிகம் பதிவானால், காங்கிரஸுக்கு வாய்ப்பு என்றும், வாக்குகள் குறைந்த அளவில் பதிவானால் அது பாஜக.,வுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டிருந்தது.




