பிரபல மலையாள நடிகர் காலசாலா பாபு நேற்று எர்ணாகுளத்தில் காலமானார். இவருக்கு வயது 68. இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
நடிகர் திலீப் உடன் ரன்வே, மம்முட்டியுடன் துருப்பு குலன், மோகன்லாலுடன் பலேட்டன், மம்முட்டி மற்றும் பிரிதிவிராஜ் ஆகியோருடன் போகிரிராஜா படங்கள் உள்பட 50-க்கு மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.



