புதுதில்லி : மத்திய அமைச்சரவை நேற்று திடீரென மாற்றி அமைக்கப் பட்டது. மத்திய நிதியமைச்சராக உள்ள அருண் ஜேட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவர் உடல் நலம் குன்றியுள்ள நிலையில் ரயில்வேத் துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயலுக்கு நிதித்துறை தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது.
மேலும், அண்மைக் காலத்தில் அதிகம் சர்ச்சைக்கு உள்ளான ஸ்மிருதி இரானி வகித்து வந்த தகவல் ஒலிபரப்புத் துறை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்ய வர்த்தன் சிங் ரத்தோருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக நீடிக்கிறார்.




