காங்கிரஸ், ஜே.டி.எஸ். தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சி அமைக்க பாஜக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அவகாசம் கோரி ஆளுநரிடம் எடியூரப்பா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோரும் சந்திந்து பேசியுள்ளார்.
இருவரும் மாயம் என புகார்:
இந்நிலையில், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ.,க்கள் வெங்கடப்ப நாயக்கா, வெங்கட ராவ் ஆகியயோர் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் இருவரும் மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



