
பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாஜக கோரிக்கையை நிராகரித்து கர்நாடக பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு ரகசிய முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு பதவியேற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜர். ஆளுநரிடம் எடியூரப்பா வழங்கிய கடிதம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்
எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி
உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
ஆளுநரின் முடிவுக்கு எதிராக தம்மையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு ராம் ஜெத்மலானி கோரிக்கை
மே 15, 16 தேதிகளில் ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடித நகல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது
காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
பாஜக-வை கர்நாடக ஆளுநர் எதனடிப்படையில் ஆட்சியமைக்க அழைத்தார்..? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்,
நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என கருத்து தெரித்துள்ளது.




மோசடி bjb தோறà¯à®•à¯à®®à¯