நாட்டில் உள்ள 716மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க வல்லுநர்களை அமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் அலுவலகமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து சமூகஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோரைத் தண்டிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. அதன்படி நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கண்காணிக்கச் சமூக ஊடகத் தொடர்புப் பிரிவு அமைத்து அதில் வல்லுநர்களைப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறியியல் பிரிவான பிஇசிஐஎல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்த அமைப்பு அனைத்து ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து தரவுகளைச் சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், கேபிள் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ஆகியவற்றையும் கண்காணிக்கும்.



