தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



