அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம்
துரதிர்ஷ்டவசமானது பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்றார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



