மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அரை மணி நேரத்தில் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளகாடாக மாறின.
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கும் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன்பு பெய்யும் மழைக் காலம் மும்பையில் தொடங்கியது. இந்த மழையால் மாம்பழங்கள் பழுக்கும் எனத் தெரிகிறது.
கோடை காலத்தில் சூரியன் வடக்கு திசை நோக்கி செல்லும். அப்போது ஓரிடத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்ப நிலையால் இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதுவே முன்பருவ மழை என்பதாகும். இப்படிப் பட்ட மழைப் பொழிவு மும்பை மாநகரைத் திணறடித்தது. அரை மணி நேரத்திற்கு மும்பையில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இதனால் மழைக்கால பாதிப்பை மக்கள் உணர்ந்தனர்.




