சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற அமர்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், பயங்கரவாதத்தின் விளைவாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடு என்றல் அது ஆப்கானிஸ்தான் என்று எடுத்துக் கொள்ளலாம்! பயங்கரவாத பாதிப்பால் மோசமான நாடுக்கு ஆப்கானிஸ்தான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே நேரம், அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று குறிப்பிட்டு மோடி, ஆப்கன் அதிபருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 6 சதவீதம் பேர் உள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, இதனை இரு மடங்காக உயர்த்த முடியும் என்றார். மேலும், இந்தியாவில் பௌத்த மதத் திருவிழாவுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறியஅவர், அண்டை நாடுகளுடனும், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடனும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறினார்.




