எப்போதும் கடினமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் போலீசார், தங்களின் மறுபக்கமான மனிதநேய செயல்களில் ஈடுபட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடத்துள்ளது. மத்திய பிரதேச போலீசார் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட பிறந்த குழந்தை ஒன்றை காப்பாற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.
தங்கள் வழக்கமான பணிகளுடன் இந்த மனிதநேய பணியை மேற்கொண்டு வரும் மத்திய பிரதேச போலீசார் இதுவரை பல்வேறு இடங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 402 பிறந்த குழந்தைகளை மீட்டுள்ளனர்.
ஆதரவற்ற குழந்தைகள் மீட்ப்பில் போபாலில் 18 குழந்தைகளை மீட்கப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை இந்தூர், 3-வது இடத்தை சிந்த்வார மாவட்டமும் பிடித்துள்ளது.



