
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டையும் வசூலையும் பெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகினர் பலர் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்
அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் விவேக், படத்திற்கும் படக்குழுவினர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக ரஜினியை வித்தியாசமாக கையாண்ட இயக்குனருக்கு சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
காலா பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை வித்தியாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள். எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது.
https://twitter.com/Actor_Vivek/status/1005704834597572608



Leave a Reply