December 5, 2025, 7:44 PM
26.7 C
Chennai

இப்படி இருந்தால்… மோடியால் பணி செய்ய இயலுமா? கேட்கிறார் கேஜ்ரிவால்!

34 May17 arvind - 2025

புது தில்லி: இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால், பிரதமர் மோடியால் பணி செய்ய இயலுமா என்று கேள்வி எழுப்புகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

வித்தியாசமான போராட்டங்களை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். தன் அரசுக்கு எதிராக, சொல்லப் போனால் தனக்கு எதிராக தானே போராட்டத்தில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர். அவர் இப்போது  5வது நாளாக இன்று தில்லி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் உள்ளிருப்பு – தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன் வீட்டை மறந்து ஆளுநர் இல்ல விருந்தினர் அறையே கதி என்று போராட்டத்தை நடத்தி தில்லிவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

ias officers strike delhi - 2025

தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் தங்களது நான்காவது நாள் இரவை சோபாவில் தூங்கியபடி கழித்தனர்.

சர்க்கரை நோயாளியான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வீட்டில் இருந்து புத்தகங்கள், இன்சுலின் ஊசிகள், மருந்து மாத்திரைகள், உணவு, மாற்று உடைகள் போன்றவை கொடுத்து அனுப்பப்படுகின்றன.  ஆளுநர் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுப்பதில்லை என்பது கேஜ்ரிவாலின் புகார்.

தில்லி அரசுக்கு எதிராக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் அன்ஸு பிரகாஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனராம்.

அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடச் செய்ய உரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல், பழியை மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் திருப்பிவிட்டிருக்கிறார் கேஜ்ரிவால். முதல்வராக இருந்து கொண்டு நிர்வாகத்தை சரியாக நடத்தத் தெரியாமல், வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்டு, நாட்களை கழித்து வருகிறார். தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

அரசுப் பணிக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கும் வராத அதிகாரிகள் மீது அத்தியாவசிய சேவைகள் சட்டமான எஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரேசன் கார்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னாவை ஆளுநர் இல்லத்தில் தங்கி மேற்கொண்டு வருகிறார்.

இதற்குக் காரணமாக அவர் கூறுவது, அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தில்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

தில்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல், மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதிய கேஜ்ரிவால், இந்தப் பிரச்னையில் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி இருந்தால் எப்படி பணி செய்ய முடியும்? மோடிஜியால் ஒரு நாளாவது இப்படி ஒரு சூழலில் பணியாற்ற முடியுமா? விமர்சிப்பவர்கள் எங்களுக்குச் சொல்லுங்கள், இதுபோன்ற சூழலில் எங்களால் எப்படி செயலாற்ற இயலும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

1 COMMENT

  1. இதை விட பல மடங்கு ஒத்துழையாமை காங்கிரஸ் நடத்தியும் குஜராத்தை முன்னேற்றி காட்டினார் மோடி . ஆட தெரியாதவன் தெரு கோணல் என்றானாம் AK

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories