காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பு!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

CauveryManagementAuthority member masood - 2026

காவிரி நதிநீர் மேலாண்மைத் திட்டத்தின் அடிபப்டையில், அரசிதழில் வெளியிடப்பட்ட ஜூன்.1ம் தேதி அறிவிக்கையின் அடிப்படையில், அமைச்சகத்தால் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.

இதில், தலைவராக கூடுதல் பொறுப்புடன் தலைமை பொறியாளர் நவீன் குமார் உள்ளார். உறுப்பினர்களாக, கர்நாடக அரசின் தலைமை பொறியாளர் (பெயர் குறிப்பிடப் படவில்லை), கேரள அரசின் சார்பில் கே.ஏ.ஜோஷி, புதுச்சேரி அரசின் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வி.சண்முகசுந்தரம், தமிழக அரசின் சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆர்.செந்தில் குமார், அறிவியல் அறிஞர் எம்.மொஹபத்ரா, கோவை சிஎஸ்ஆர்ஓ என்.எம்.கிருஷ்ணன் உன்னி, தோட்டக்கலைத்துறை ஆணையர் ஆகியோரும், கூடுதல் பொறுப்புடன் உறுப்பினர் செயலராக ஒய்பிஓ தலைமை பொறியாளர் ஏ.எஸ்.கோயல் ஆகியோரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

CWRA cauvery - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.