நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை, மாநில அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.
நடிகர் கமலஹாசன், மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஒரு அரசியல் அமைப்பைத் துவங்கினார். அதற்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரைச் சூட்டினார். பின்னர் அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யம் தொடர்பான ஆட்சேபணைகள் ஏதும் இருந்தால், இதுதொடர்பான தேர்தல் ஆணையத்தில் அளிக்கலாம் என்று, ஆட்சேபணைகளைத் தெரிவிக்க தேர்தல் ஆணையம் விளம்பரங்களை வெளியிட்டது. அதற்கான காலக்கெடு முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஆஜரான கமல்ஹாசன், அதிகாரிகள் கோரிய ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
இதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தை அங்கீகரிக்கப்படாத மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகினது.
எதà¯à®¤à®©à¯ˆà®•டà¯à®šà®¿à®•ளà¯à®…à®™à¯à®•ீகாரம௠பெறாத படà¯à®Ÿà®¿à®¯à®²à®¿à®²à¯ உளà¯à®³à®©?