ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான பிரமாண்ட திருமண நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் 350க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணம் முடிந்ததும் விழா மேடையில் இருந்து கீழே இறங்கிய ரகுபர் தாஸ், உற்சாகமாக பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினார். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.



