தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 10-வது BRICS (Brazil, Russia, India, China,South Africa) உச்சி மாநாடு வரும் 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி பயணமாக உள்ளார்.
உகாண்டா செல்லும் பிரதமருக்கு, எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி வரும் 25ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



