உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ்- குரோசியா அணிகள் மோதிய போட்டியின் போதும், ஜூலை ஆறாம் தேதி பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டியின் போதும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட டுவிட்களின் எண்ணிகை 115 பில்லியனாக உள்ளது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
32 அணிகள் பங்கேற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 மைதானங்களில், 64 போட்டிகளாக நடைபெற்றது.
இந்த போட்டியின் இறுதி போட்டியில் குரேசியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்று, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் பிரான்ஸ் – குரேசியா அணிகள் இடையே நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியின் போது ரசிகர்கள் பதிவு செய்த டுவிட்டர் பதிவுகளின் எண்ணிக்கை 115 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.



