பாராளுமன்றத்தில் மோடியை கட்டி அணைத்த ராகுல்

Published:

23 July20 ragul modi - 2026பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது காரசாரமாகப் பேசிய ராகுல் காந்தி பேச்சை முடித்த பின்னர், பிரதமர் இருக்கும் இடம் சென்று அவரைக் கட்டி அணைத்தார். மோடி சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பாரதீய ஜனதாவினரால் குழந்தை என்ற அர்த்தத்தில் “பப்பு” என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. அவர் பேச்சில் நேரடியாக பிரதமரை குற்றம் சாட்டினார். அப்போது மோடி அவையில் அமர்ந்து சிரித்தபடியே ராகுல் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தார். பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்து பேசினார். தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார்

Related articles

Recent articles

spot_img