புது தில்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுகிறார். அவர் உச்ச நீதிமன்றத்தின் 8 வது பெண் நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கான பணி நியமன ஆணை வரும் 6ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், அவர், உச்ச நீதிமன்றத்தின் 8 வது பெண் நீதிபதி என்ற பெருமை பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளாக பாத்திமா பீவி, சுஜாதா வி. மனோகர், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா,ரஞ்சனா பிரகாஷ் தேசாய், பானுமதி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் பணி புரிந்துள்ளனர். இவர்களில் பானுமதி, இந்து மல்ஹோத்ரா இருவரும் தற்போது நீதிபதிகளாக பணிபுரிந்து வருகின்றனர். எனவே இவர்கள் இருவருடன் 3 ஆவது பெண் நீதிபதியாக இந்திரா பானர்ஜி இணைகிறார்.




