திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது. #RIPKarunanidhi
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்தும், இறுதிச் சடங்கை தடை செய்யக் கோரியும் டிராபிக் ராமசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இறுதிச் சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அணுகலாம் என்று உத்தரவிட்டது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றும், தனது தரப்பு நியாயத்தைக் கேட்காமல், மற்ற நான்கு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், தனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் கூறியிருந்தார் டிராபிக் ராமசாமி.




