அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.



