புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். அதன்படி மாநிலத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 9,48,332, இதில் ஆண் வாக்காளர்கள் 4,48,259, பெண் வாக்காளர்கள் 4,99,985, மூன்றாம் பாலினத்தவர் 88.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய கந்தவேலு, வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் என்ற யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் பயன்படுத்தப்படும் எனவும், இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,240 வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக கந்தவேலு தெரிவித்துள்ளார்.




