போலி ஆவணங்கள் மூலம் எச்.டி.எஃப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி!

Published:

hdfc bank - 2026

போலி ஆவணங்களை கொடுத்து எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தில்லியில் குருகிராம் பகுதியில் ஆடம்பர ரக கார்கள் விற்பனை செய்யும் 2 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களாக ராஷ் பால் சிங் டாட் மற்றும் மந்தீர் சிங் டாட் ஆகிய இருவர் உள்ளனர். இந்த நிலையில் போலியான ஆவணங்களை கொண்டு எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து ரூ.120 கோடி தொகையை இருவரும் கடனாக பெற்றுள்ளனர்.

இதுபற்றி வங்கியின் உதவி துணை தலைவர் சஞ்சய் சர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து 2 நிறுவனங்கள் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img