குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக பதவியேற்று ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு, வெங்கய்ய நாயுடு தமது அனுபவங்களைத் தொகுத்து, ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
“மூவிங் ஆன்… மூவிங் ஃபார்வர்டு – எ இயர் இன் ஆஃபீஸ்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மிகவும் ஒழுங்கானவர் வெங்கய்ய நாயுடு! ஒழுக்கத்துடன் இருங்கள் என்று நாம் சொல்வதே கூட ஜனநாயக விரோதமானது என்று கூறப்படும் நிலை தற்போது உள்ளது. ஒழுங்காக இருங்கள் என்று ஒருவர் சொன்னால், அவர் ஏதேச்சாதிகாரத்துடன் இருக்கிறார் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறார் வெங்கய்ய நாயுடு! அவர், எந்த வேலையைச் செய்தாலும் விடா முயற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார். தேசக் கட்டமைப்பில் அவர் தனது உறுதியையும் கடமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு விவசாயத்தின் மீது வெறி உண்டு. விவசாயிகள் நலனுக்காகவும், கிராம வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறார்.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் வெங்கய்ய நாயுடுவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. சிறந்த பேச்சாளர், நல்ல குரல் வளம், நகைச்சுவை உணர்வு கொண்டவர் வெங்கய்ய நாயுடு என்றார் மோடி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, வேளாண்துறைக்கு தேவையான ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம்! எதிர்காலத்தில் வேளாண் துறையை லாபம் மிகுந்ததாக மாற்றாவிட்டால் மக்கள் அதனை கைவிட்டு வெளியேறி விடுவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஆக்கப்பூர்வமானதல்ல என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







திரà¯. மோடி சொலà¯à®²à¯à®µà®¤à¯ சரிதான௠. à®’à®´à¯à®•à¯à®•ம௠பறà¯à®±à®¿ பேசினால௠அதை சரà¯à®µà®¾à®¤à®¿à®•ாரம௠எனà¯à®±à¯ மகà¯à®•ளின௠மனதை மாறà¯à®±à®¿ விடà¯à®Ÿà®¾à®°à¯à®•ள௠சிலர௠அவரà¯à®•ளின௠சà¯à®¯à®²à®¾à®ªà®¤à¯à®¤à¯à®•à¯à®•ாக.
மாமியார௠உடைதà¯à®¤à®¾à®²à¯ மண௠செடà¯à®Ÿà®¿, மரà¯à®®à®•ள௠உடைதà¯à®¤à®¾à®²à¯ பொன௠செடà¯à®Ÿà®¿ எனà¯à®± பழமொழி உணà¯à®®à¯ˆà®¤à®¾à®©à¯. நம௠பிரதமர௠சரியாகதà¯à®¤à®¾à®©à¯ சொலà¯à®•ிறாரà¯.