ரிலையன்ஸ் ஜியோ போன்களில்… வந்துவிட்டது வாட்ஸ்அப் வசதி!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்

jio whatsapp - 2026

தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ போன்களில்  தற்போது வாட்ஸ் அப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாட்ஸ் ஆப்பின் புதிய மென்பொருள் கீ பேடுடன் கூடிய ஜியோ வகை போன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்ஃபோன் எண்ணை ஓடிபி மூலம் உறுதி செய்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப் படுள்ளது.

கோடிக்கணக்கான ஜியோ ஃபோன் வாடிக்கையாளர்கள், இந்த அறிவிப்புக்காகக் காத்திருந்தனர். அவர்கள், இனி வாட்ஸ் அப் சாட்டிங்கை குழுவாகவோ அல்லது தனி நபருடனோ மேற்கொள்ள முடியும் என்று வாட்ஸ் அப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ ஃபோன்களுக்கான வாட்ஸ் அப் மென்பொருள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றாலும் அது வரும் 20-ஆம் தேதி முதல் முறைப்படி செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

1 thought on “ரிலையன்ஸ் ஜியோ போன்களில்… வந்துவிட்டது வாட்ஸ்அப் வசதி!”

  1. அருமை. செயல்பாடு எப்படியிருக்கும் ? விரைவில் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.