மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுவதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலில் பல பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாடுக்கோடு நெடுகிலும் மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுவதாகக் கூறிய அவர், ஆனால் அதனை தாங்கள் எந்த வகையில் செயல்படுத்த விரும்புகிறோம் என்பதை தற்போது கூற இயலாது என்று தெரிவித்தார்




