புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா., ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதை அறிவித்து ஐ.நா., கௌரவம் செய்துள்ளது.
PM @narendramodi has been awarded the prestigious @UN Champions of the Earth Award.
President @EmmanuelMacron and Shri Modi have been awarded in the Policy Leadership category, for their efforts regarding the International Solar Alliance. https://t.co/zSNk3lS3uy
— PMO India (@PMOIndia) September 26, 2018
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும் இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் என உறுதி ஏற்றதற்காகவும் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
The @UN has also noted PM @narendramodi‘s efforts towards eliminating single-use plastic in India by 2022.
— PMO India (@PMOIndia) September 26, 2018
கொச்சின் சர்வதேச விமான நிலையத்துக்கும் ஐ.நா.வின் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மாக்ரான் உள்ளிட்ட 6 பேருக்கு ஐ.நா.வின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.




