புது தில்லி : பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனாதிபதிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது அறிவு மற்றும் பல்வேறு விஷயங்களில் முன்னோடி தன்மையால் இந்தியா பல வகைகளிலும் பயனடைந்துள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பகுதிகளுடனும் அவரது தொடர்பு அற்புதமானது. அவர் நீண்ட காலம் பலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
Best wishes to Rashtrapati Ji on his birthday. India has benefitted greatly from his wisdom and perspectives on various subjects. He has connected wonderfully with every section of our society. I pray for his long and healthy life. @rashtrapatibhvn
— Narendra Modi (@narendramodi) October 1, 2018




