புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.216 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நிரவ் மோடிக்கு வெளிநாடுகளில் உள்ள 5 வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றில் உள்ள ரூ.278 கோடியும் முடக்கப்பட்டுள்ளாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ரூ.22.69 கோடி மதிப்பிலான வைரம் பொறிக்கப்பட்ட தங்க நகைகள் ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தெற்கு மும்பையில் உள்ள ரூ.19.5 கோடி மதிப்பிலான வீடு முடக்கப்பட்டுள்ளது. இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




