புது தில்லி: தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தில்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் உடன்பாடு கையெழுத்தானது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
வேதாந்தா நிறுவனம் தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உடன்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் மூன்றாவது இடமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் உரிமத்தை ஓ.என்.ஜி.சி. பெற்றுள்ளது.
முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கண்டித்துப் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. எனவே அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
Attended the ceremony to mark the signing of ‘Revenue Sharing Contracts’ with 6 companies for 55 exploration blocks spread across 11 sedimentary basins of India post the conclusion of Open Acreage Licensing Policy Bid Round -I under HELP. pic.twitter.com/dwIXmQZ8zd
— Dharmendra Pradhan (@dpradhanbjp) October 1, 2018




