இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவின் பெயரை மாற்றப் போவதில்லை என, அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் பிராயாக்ராஜ் என மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பாஜக ஆளும் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிம்லாவின் பெயரை ஷியாமளா என மாற்றுமாறு, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சிம்லா பெயரை மாற்றுமாறு வந்த கோரிக்கைகள் குறித்து தாங்கள் ஆலோசிக்கவில்லை என்றும், அந்த கோரிக்கைகளை தாங்கள் நிராகரித்து விட்டதாகவும் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
Popular Categories




