இரு நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Published:

09 July12 Modi - 2026

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் 2 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, டோக்கியோவில் இருந்து சுமார் 110 கி.மீ., தொலைவில் ஃப்யூஜி மலை உச்சியில் உள்ள தமது விடுமுறைக்கால பண்ணை இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே விருந்தளிக்கவுள்ளார்.

இந்தியா – ஜப்பான் இடையிலான ஆண்டுக் கூட்டத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்காணிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின் போது, பொருளாதார வளர்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img