‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து இவர் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருவதுடன் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழ்ப் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் அண்மையில் கவர்ச்சிப் பட போட்டோஷூட் நடத்தினாராம். அவற்றில் தனக்குப் பிடித்த படங்களை மட்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, படங்களை எடுத்த மனிஷ் என்பவரை டேக் செய்து, அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நம்புங்க இந்தப் படங்கள்லாம் என்னோடதுதான்.. இவை போட்டோஷாப் செய்யப் பட்ட படங்கள் இல்லை என்று அடித்துக் கூறும் நிவேதா பெத்துராஞ், இன்னும் நாளை வரைக்கும் வெய்ட் பண்ணுங்க… மேலும் நிறைய கவர்ச்சிப் படங்கள போடப் போறேன் என்று ஆசை காட்டியுள்ளார்.
Yaa it's me not photoshop !!
More to launch this SundayThank you #Manish #Nivethapethuraj pic.twitter.com/zURm7vb284
— Nivetha Pethuraj (@Nivepethuraj) October 27, 2018






