ஐ.பி.எல்-8: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் துவக்கியது!

kolkatta-night-riders ஐ.பி.எல். சீஸன் 8 டி 20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, சீஸன் 8ன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐ.பி.எல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய கொல்கத்தா அணி மும்பை அணியை 20 ஓவர்களில் 168 ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்தது. மும்பை அணியில் ரோகித் சர்மா 98 ரன்களும், ஆண்டர்சன் 55 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர். இறுதியில் அந்த அணி 168 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங்கைத் துவக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உத்தப்பா 9 ரன்களில் ஏமாற்றிய போதும், பாண்டே, கம்பீர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. 40 ரன்களில் பாண்டே ஆட்டமிழக்க கம்பிர் அரைசதம் கடந்தார். பின்னர் பதான்- யாதவ் இணை பொறுப்புடன் விளையாட 19 ஆவது ஓவரிலேயே கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.