பத்தனம்திட்ட: சரணகோஷம் சொல்லி மலை ஏற முயன்றதாகக் கூறி கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
சபரிமலையில் சரண கோஷத்தைச் சொல்லி மலை ஏற முயன்ற பாஜக., மாநில பொதுச் செயலர் சுரேந்திரன், மற்றும் அவருடன் வந்த பக்தர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இருமுடி கட்டி மலை ஏற முயன்ற போது சரண கோஷம் சொல்லி சத்தமிட்டனர் என்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. காரணம், அது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதை அடுத்து கே.சுரேந்திரன் கொட்டாரக்கர கிளைச் சிறையிலும், உடன் கைதான பக்தர்கள் பூஜப்புர மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்ற போது, போலீஸார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது.