இனி சிப் பொருத்திய புதிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மட்டுமே செல்லும் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.
பணம் மோசடி காரணமாக வங்கிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பதில், புதிய டெபிட், கிரெடிட் கார்டுகளை டிச. 31-க்குள் பெற்றுக் கொள்ளும்படி எஸ்.பி.ஐ., அறிவுறுத்தியுள்ளது.
சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் 2019 ஜன.1ஆம் தேதி முதல் செயல்படாது. சிப் பொருத்தப்பட்ட கார்டுகள் மட்டுமே செல்லும் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.



