ரஜினியின் 2.0 படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘2.0’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஆனால் இதே படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

‘2.0’ திரைப்படம் சீனாவில் 10 ஆயிரம் திரையரங்கங்களில் 50 ஆயிரம் ஸ்க்ரீன்களில் அதிலும் 47 ஆயிரம் 3டி ஸ்க்ரீன்களிலும் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளது.

இந்த தகவல் லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

‘2.0’ திரைப்படம் ஏற்கனவே ரூ.500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், சீனாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இப் படத்தின் மொத்தம் வசூல் ரூ.1000 கோடி மைல்கல்லை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.