சத்யம் வழக்கு: ராமலிங்க ராஜுவுக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5 கோடி அபராதம்

ஹைதராபாத் : சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன்நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கம்பெனியின் கணக்கு வழக்குகளில் மோசடி செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், ராமலிங்க ராஜுக்கு ரூ. 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று காலை 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனையை பிற்பகலில் வழங்குவதாக அறிவித்தது. 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜு ஏற்கெனவே 32 மாதங்கள் சிறையில் இருந்துள்ளதால், இன்னும் 52 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும்.