ஞாயிறு அன்று சோனியாவை சந்திக்க தில்லி செல்கிறார் ஸ்டாலின்!

சென்னை : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தில்லி செல்கிறார்.

ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை அவர் சந்திக்க உள்ளார்.

வரும் டிசம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அவர் சோனியாவுக்கு நேரில் அழைப்பு விடுக்கிறார்.