1 மணி வரை ராஜஸ்தானில் 42% வாக்குப் பதிவு! ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாஜகவும் காங்கிரசும் 130 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியில் உள்ளன. மொத்தமுள்ள 51,687 வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு மட்டுமான 259 சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்கள், பாதுகாப்புக்கான காவலர்கள் என அனைவருமே பெண்கள்தான்!.

இன்று காலை, ஜலாவரில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே வாக்களித்தார். காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் ஜோத்பூரில் வாக்களித்தார்.