ஓட்டுப்பதிவு நாளில் நாளிதழ்களில் முழுப் பக்க முகப்பு விளம்பரம்! டிஆர்எஸ் கட்சி விதிமீறல்!

தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.
தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.

இன்று தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பது தேர்தல் விதிமுறை மீறல் என்ற நிலையில், தெலங்கானா தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.
தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம்.

தெலங்கானாவில், மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளில், 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1,821 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 99 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பாஜக., 118 இடங்களில் போட்டியிடுகிறது. தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.