புது தில்லி: சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை திமுக எம்.பி கனிமொழிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
தில்லி அம்பேத்கர் சர்வதேச அரங்கில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸைச் சேர்ந்த லோக்மட் நிறுவனத் தலைவர் விஜய் தர்தா ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸைச் சேர்ந்த விஜய் தர்தா இது குறித்து கூறிய போது, லோக்மட் செய்தி நிறுவனம் சார்பில் நாடாளுமன்ற விருதுகள், இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படுகிறது! திமுகவைச் சேர்ந்த கனிமொழி கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பாக பங்காற்றியுள்ளார். ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காக கனிமொழிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்றார்.
காங்கிரஸைச் சேர்ந்த விஜய் தர்தாவின் லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு தேர்வு செய்தது.