சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து நடிகர் சுரேஷ் கோபி தொடங்கிய போராட்டம்!

suresh gopi bjp mp - 2026

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த கண்மூடித்தனமான தீர்ப்பை அடுத்து, அதற்கு எதிராக கேரள மாநிலம் மற்றும் தென் மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. ஹிந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பை அடுத்து ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதையே தொழிலாகக் கொண்ட கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்துவர்கள் பின்னணியுடன் இயங்கக் கூடிய பெண்கள் சிலர், சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வரும் நிலையில் அதே பெண்களில் சிலர் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்புக் குழுவில் இருந்த பெண்கள் சார்பில் நேற்று தீபம் ஏற்றி போராட்டம் நடத்தினர். கேரளாவில் உள்ள களியக்காவிளையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை பிரபல மலையாள நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி தொடங்கி வைத்தார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

தமிழகத்திலும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலை காக்க விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மற்றும் இந்து அமைப்புகள், குருமார்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில், சபரிமலைக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விளக்கேற்றும் போராட்டம் நடைபெற்றது. கொடைக்கானலில் நேற்று மாலை மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ‘சபரிமலையை காப்போம்’ என, சரணம் கோஷம் எழுப்பி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories