புது தில்லி: கடந்த செவ்வாய்க்கிழமை புது தில்லியில் பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முப்தி முகமது சயீத், காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனி நகரியம் அமைக்கப்படும், அதற்குத் தேவைப்படும் நிலத்தை மாநில அரசு வழங்கும் என்று கூறியிருந்தார். ஆனால், வியாழக் கிழமை நேற்று சட்டப் பேரவையில் பேசிய முப்தி முகமது சயீத், காஷ்மீரில் பண்டிட்களுக்கு தனிக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை, அவர்கள் அனைவருடனும் சேர்ந்துதான் வாழ வேண்டும் என்று தெரிவித்தார். இந்தப் பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக, தனி நகரியம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை மட்டுமல்லாது, அங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ஒரு செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றார்.
பண்டிட்களுக்கு தனி நகரியம்: மத்திய அரசி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari