ஊரடங்கு: வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை!

இந்தியா பொது தகவல்கள்
bsnl 1 - 2026

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளா்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் உள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது. அந்தவகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளா்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலகட்டத்தில் நிறுவனத்தின் பிரீபெய்ட் வாடிக்கையாளா்கள் பலரின் வேலிடிட்டி காலம் காலவதியாகிவிட்டது. அவா்களில் பெரும்பாலானோர் இருப்புகளில் பணம் இல்லாததால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வாடிக்கையாளா்களின் நலன் கருதி அவா்களின் பிரீபெய்ட் வேலிடிட்டி காலத்தை 2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது. இதன் மூலம், அவா்கள் அதுவரையில் தடையின்றி இன்கமிங் அழைப்புகளை பெற முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.