கேள்வி:- நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் பாராயணம் செய்து வருகிறேன். இவற்றைப் பாராயணம் செய்யும் போதும், பாராயணம் செய்யும் நாட்களிலும் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?
பதில்:- அவரவர் சக்திக்குத் தகுந்தபடி நியமங்களைக் கடைபிடிக்கலாம். அந்த நாட்களில் தாமச குணத்தை ஏற்படுத்தும் உணவு வகைகளான வெங்காயம், பூண்டு போன்றவற்றை நீக்க வேண்டும். சாப்பிட்ட உடனே பாராயணம் செய்யாதிருப்பது நல்லது. பாராயணம் பூர்த்தி ஆன பின் தூபம், தீபம் சமர்ப்பித்து பாலோ அல்லது பழமோ நைவேத்யம் செய்து, முடிந்தால் ஒரு தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். முக்கியமான இந்த நியமங்களைக் கடைப்பிடித்தாலே போதும்.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்கள்:-
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)





ethuvara eppadi thelivana AANMEGA VINAA VIDAI PAGE I PADITHTHAthilai thanks Lots